பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க வேண்டுமா ! இப்படி செய்யுங்கள்

images 12
images 12

பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள்.

இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ.

தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், தூரிகை கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு தோடம்பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும்.

கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது.

கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.