சுகாதாரமான சமையலறை குறிப்புகள்

201906130854063846 Kitchen cleaning tips for women SECVPF
201906130854063846 Kitchen cleaning tips for women SECVPF

சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதினால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல், மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம்.

சமைக்கும் பகுதி மற்றும் சமையல்பொருட்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அழுகின மற்றும் கெட்டுப் போன உணவுகளை உட்கொள்வதை, தவிர்க்க வேண்டும். அழுகிய காய்கறிகளை பயன்படுத்தக் கூடாது.

சமைப்பதற்கு முன்பு மற்றும் பரிமாறும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

காய்கறி போன்ற உணவுப் பொருட்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும்.உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க வேண்டும்.

உணவுப் பொருட்களை வாங்கும்முன் எந்த நாள்வரை அந்த பொருளினைப் பயன்படுத்தலாம் என்ற விவரத்தை பார்த்து வாங்க வேண்டும். காலாவதியான பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.