அனைவருக்கும் இலவச இணைய வசதி – சுந்தர் பிச்சை

109996915 pichai
109996915 pichai

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான, வெளிப்படையான இணைய இணைப்பு தேவை என கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவிக்கையில், உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவச இணைய வசதி வேண்டும்.

அனைவருக்கும், இலவச மற்றும் வெளிப்படையான இணையம் தேவை என்றாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் தரவு இறையாண்மையும் முக்கியமானது.

ஆரம்ப காலத்தில் நான் ஒரு தொலைபேசி அல்லது தொலைக்காட்சிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

நவீன சாதனங்கள் என் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு முறையும், தொழில்நுட்பம் நம் வாழ்வில் எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைகண்டேன்.

இப்போது, செயற்கை நுண்ணறிவு, வானிலை உள்ளிட்டவற்றில், சிறந்த ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை காண்கிறேன்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு மூலம் பாதுகாப்பை பெற முடியாது.

அதற்கு, உலகளாவிய கட்டமைப்பு தேவை. இதற்கு, அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.