இரத்தத்தை பார்த்தால் மயக்கம் அடைவது ஏன்?

download 3 2
download 3 2

பொதுவாக நம்மில் சிலர் இரத்தத்தை கண்டு பயப்படுவது அல்லது மயக்கமடைவதுண்டு. இந்த விடயம் ஹீமோபோபியா என அழைக்கப்படுகிறது.

இந்த ஹீமோபோபியா உலகில் உள்ள மக்களில் சுமார் 1 முதல் 2 சதவீதம் பேர் இந்த பிரச்சனையால் பாதிப்படைந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் குறைய ஆரம்பித்து விடும்.

இதனால் மூளைக்கு போகும் இரத்த ஓட்டம் குறைந்து கண்கள் சொருகி மயக்கமடைந்து விடுகிறார்கள்.

உங்களுக்கு மயக்கம் வருகின்ற மாதிரி இருந்தால் அருகில் ஒரு இடத்தை பார்த்து முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

அப்படியே படுத்துக் கொண்டு கால்களை உயர்த்துங்கள். இப்படி செய்யும் போது இரத்த ஓட்டம் மூளைக்கு போய் கொஞ்சம் மயக்கம் தெளிந்து விட வாய்ப்புள்ளது.

ஊசி போடும் போது இரத்தத்தை கண்டாலோ, இரத்த பரிசோதனைக்கு சென்றாலோ நிதானமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அதிக நேரம் நின்று கொண்டே இருப்பது, வெயிலில் அதிக நேரம் செலவழிப்பதால் கூட மயக்கம் வரலாம். இந்த மாதிரி பிரச்சனை இருப்பவர்கள் வெளியில் செல்கின்ற பொழுது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.

வன்முறை, சண்டை ஆகியவை நடக்கும் இடங்களில் வேடிக்கை பார்ப்பது போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.