கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட அரிய அழற்சி!

98
98

கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட ஒரு அரிய அழற்சி நோயால், பிரித்தானியாவில் 100 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றையவர்கள் விரைவாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லண்டனில் மட்டும் 14 குழந்தைகள் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். எட்டு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

அதிக காய்ச்சல், சொறி, சிவந்த கண்கள், வீக்கம் மற்றும் பொது வலி போன்ற அறிகுறிகளுடன், எட்டு குழந்தைகள், எவெலினா லண்டன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு நுரையீரல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இருப்பினும் இதய மற்றும் சுழற்சி சிக்கல்களை மேம்படுத்த ஏழு குழந்தைகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது நோய் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை முக்கியமாக பாதிக்கும் ஒரு அரிய நிலை உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் அறிகுறிகளாக சொறி, கழுத்தில் வீங்கிய சுரப்பிகள் மற்றும் உலர்ந்த நிலையில் உதடுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய நோய் 16 வயது வரையிலான வயதான குழந்தைகளையும் பாதிக்கிறது. இதனால் சிறுபான்மையினர் கடுமையான சிக்கல்களை சந்திக்கின்றனர்.

‘கவாசாகி நோய்’ போன்ற அறிக்குறியை கொண்ட ஒரு புதிய நோயாக இது இருக்கலாமென மருத்துவர்கள் விபரிக்கின்றனர்.