சற்று முன்
Home / Uncategorized / ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசவின் ஆட்சி விரைவில் மலரும் – கேசவகுமாரன்
20200629 135958
20200629 135958

ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசவின் ஆட்சி விரைவில் மலரும் – கேசவகுமாரன்

இலங்கை அரசியல் வரலாற்றில்  30 வருட யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை  எனவே ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசாவின் ஆட்சி  மட்டக்களப்பில் மலரப்போகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பத்மநாதன் கேசவகுமாரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் நேற்று திங்கட்கிழமை  (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தலைவர் சஜித் பிரேமதாசாவின் தந்தையார் பிரேமதாசா ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடை தொழிற்சாலை திட்டத்தை ஆரம்பித்த வேளை என்னுடைய மனதில் அந்த எண்ணம் ஆழமாக பதிந்திருந்தது அதனால் நான் எனது வணிககப்பல் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும். முதலாவது ஆரம்ப இடமாகவே மலைநாட்டிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் மனித வள அதிகாரியாக 9 வருடங்கள் பணிபுரிந்தேன். அந்த தொழிற்சாலைக்கு போயிருந்த சந்தர்ப்பத்தில் எல்லாருமே சிங்கள பெண்கள் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

எனவே நான் அந்த தோட்ட பகுதி மக்களுக்கு விளிர்ப்புணர்ச்சியை உருவாக்கி அங்கு பணிக்கு தமிழ் பிள்ளைகளையும் உள்வாங்கினேன் அதனால் எங்களுடைய பிரண்டிக்ஸ் நிறுவனம் தமிழ் பிள்ளைகளை எடுப்பதைப் பற்றி வினாவினர். நான் எனது தற்துணிவால் தமிழ் பிள்ளைகளை எடுத்து உற்பத்தியை பெருக்கி காட்டியதன் விளைவாக தான் பிரண்டிக்ஸ் நிறுவனம் தமிழ் பிள்ளைகள் மேல் ஆர்வம் கொள்ள ஆரம்பித்ததின் விளைவாக தான் இன்று மட்டக்களப்பில் 4 ஆயிரம் பேர் இன்று வேலைசெய்கின்றனர்.

நான் ஓய்வு எடுத்துவிட்டு என்னுடைய வீட்டில் இருக்கும் போது தலைவர் சஜித் பிரேமதாச சின்ன சவுக்கடி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உயர் பதவியிலுள்ள ஒரு அதிகாரியின் ஊழலால் அந்த வீட்டுத்திட்டம் தடைப்பட்டு அந்த மக்கள் துயரங்களில் தத்தளித்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள். அரசாங்க அதிபர் ஆகியோரிடம் மக்கள் சென்று முறையிட்டனர் ஆனால் யாரும் கை கொடுக்கவில்லை நான் துணிந்து சஜித் பிரேமதாசாவுக்கு  பல கடிதங்கள் பல கோரிக்கைகள் மற்றும் நேரடி தொலைபேசியில் கூட வாக்குவாதப்பட்டதன் விளைவாக இன்று அது வெற்றியடைந்தது.

வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்களால் குரல் கொடுக்க ஒருவர் வேண்டும் என்ற உந்துதலால் தான் இந்த தேர்தலில் நிற்கின்றேன் சஜித் பிரேமதாசவுடன் கொழும்பில் நேரடி கலந்துரையாடலின் போது அவர் எனக்கொரு வாக்குறுதி தந்தார் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியும் வெற்றி அடையாவிட்டாலும் கூட அவருடைய அமைச்சில் இணைச் செயலாளர் பதவியும் தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் 30 வருட யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை இன்று இருக்கின்ற எல்லா கட்சிகளிடமும் கீழ் மட்டத்திற்கான பார்வை இல்லை என்பதை அறிந்து கொண்டதன் பிற்பாடு தான் இதில் இறங்கினேன்.
சஜித் பிரேமதாசாவுடைய எண்ணம் மட்டக்களப்பில் 5 ஆயிரம் வீடுகட்டிக்  கொடுப்பது இதை 43 வீதமான வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனும் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தினார்.

நான் பதவியிலிருந்தாலும் அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அது மக்களுக்கு நேரடியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வரப்பிரசாதம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாத ஒதுக்கீடு தெட்டத்தெளிவாக மட்டக்களப்பு மாவட்ட ஒவ்வொரு குடி மகனுக்கும் சென்றடைவதற்கான ஒரு திட்டம் வைத்திருக்கின்றேன்.

நான் பாராளுமன்றம் சென்று ஒரு கிழமைக்குள் அதனை வெளியிடுவேன் அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்னுடைய வெற்றியை நிர்ணயிக்க போகின்ற ஏழை எளிய மக்கள் இன்றைக்கு நிழல் போல வாழ்ந்து கொண்டிருக்கின்ற வீடுகளை அமைத்துகொடுத்தவர் சஜித் பிரேமதாசா இது ஏழைகளின் ஆட்சி மட்டக்களப்பில் மலரப்போகின்றது இதற்கு முக்கிய காரணம் எனது தலைவர் சஜித் பிரேமதாசாவின் வீட்டுத்திட்டம் தான் என தெரிவித்தார்.

x

Check Also

202003110023479465 Attack on SDPI administrator Police escort for mob SECVPF

அடையாளம் தெரியாத (04) நபர்களினால் தாக்குதல்!

நாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து ...