நல்ல தூக்கம் வேண்டுமா ; இதை செய்யுங்கள்

download 11 1
download 11 1

தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அத்தியாவசயமான ஒன்றாகும்.

எது போன்ற அறையில் தூங்க வேண்டும், தூக்கத்தை கெடுக்கும் உணவுகள் என்ன போன்ற விடயங்கள் குறித்து காண்போம்.

8 மணி நேர தூக்கம்

ஒரு நல்ல தூக்க ஒழுக்கம் என்பது இரவு 10 மணிக்குப் படுத்து காலை 6 மணிக்கு கண் விழிப்பது. இதுதான் 8 மணி நேரத் தூக்கம்.

பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்குவார்கள். 10 வயதில் 12 மணி நேரம், வளர்ந்தபிறகு 6 முதல் 8 மணி நேரம். இப்படி வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் குறையும். வயதாக ஆக இது 4 மணி நேரமாகக்கூடக் குறையும்.

அதனால், 8 மணி நேரத் தூக்கம் என்பது ஆரோக்கியத்துக்கான ஓர் ஒழுக்கம் என கூறலாம்.

இருட்டான அறையில் தூங்குவது

இருட்டான அறையில் உறங்கினால்தான் நம் மூளையில் இருக்கும் தூக்க ஹார்மோன் விடுபடும். சின்ன குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், மிகவும் மங்கலான இரவு விளக்குகளை எரிய விடலாம். மற்றபடி, இருட்டான, காற்றோட்டமான அறையில் தூங்குவது நலம் தரும்.

உடல் பருமன், மனச்சோர்வு, ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்க வாதம், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படை தூக்கமின்மை தான் காரணம் என்பதை மறக்காதீர்கள்.