பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1575105392 8954
புற்றுநோயை தடுக்கும் பலாப்பழம்:
Jackfruit Uses And Benefits

பலாப்பழத்தில் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், பிளேவனாய்டுகள், பைட்டோ நியூட்ரியன்ஸ் அதிகமாக உள்ளது. உடலில் புற்றுநோய் உருவாகாமல் அழித்துவிடும்.

முக்கியமாக குடல் புற்றுநோய்க்கு மிகவும் சிறந்த மருந்தாக விளங்குவது இந்த பலாப்பழம்.

தைராய்டு நோயை குணப்படுத்தும் பலாப்பழம்:
Jackfruit Uses And Benefits

பலாப்பழத்தில் காப்பர் சத்து அதிகமாகவே நிறைந்துள்ளது. தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இயங்குவதற்கு காப்பர் சத்து மிகவும் அவசியம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிட்டு வர இந்த நோய் விரைவில் குணமாகும்.

எலும்பை வலுவாக்கும் பலாப்பழம்:

Jackfruit Uses And Benefits

பலாப்பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. பலாப்பழம் சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்கும் எலும்புகள் வலுவாகி ஆஸ்டியோபோரஸ் போன்று உருவாகும் நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற்றது.

பலாப்பழம் சாப்பிடுவதால் எலும்பு தேய்மானம், பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழம்:
Jackfruit Uses And Benefits

பலாப்பழத்தில் அதிகமாக வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அடங்கியுள்ளது. பலாப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்கும். உடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும் பலாப்பழம்:
Jackfruit Uses And Benefits

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தாராளமாய் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வரலாம். பலாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது. செரிமான பகுதிகளை சீராக வைத்திருக்கும். மலச்சிக்கல் பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.

பலாப்பழத்தில் அதிகமாக பொட்டாசியம் சத்துக்கள் இருக்கிறது. உடலில் இருக்கும் இரத்தத்தில் சோடியம் அளவை சீராக்கி இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின் பி6 இரத்தத்தில் அடங்கியுள்ள ஹோமோசிஸ்டின்(homocysteine) அளவை குறைத்துவிடும். குறிப்பாக இருதய துடிப்பு பிரச்சனையும் குணப்படுத்தும்.

இரத்த சோகையை நீக்கும் பலாப்பழம்:
Jackfruit Uses And Benefits

உடலில் புதிய இரத்தம் உருவாக பலாப்பழத்தில் இரும்பு சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, புரத சத்துக்கள், அதிகமாக  பலாப்பழத்தில் அடங்கியுள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் யோசிக்காமல் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை விரைவில் குணமாகும்.

பலாப்பழம் சாப்பிடுவதால் கண் பார்வை பிரச்சனை நீங்கும்:
Jackfruit Uses And Benefits

பலாப்பழத்தில் வைட்டமின் எ அதிகமாக உள்ளது. பலாப்பழம் சாப்பிடுவதால் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்களில் புதிய செல்கள் உருவாகும்.

மாலை கண் நோய் உள்ளவர்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக மாலை கண் நோய் பிரச்சனை விரைவில் குணமாகும்.

குறிப்பு:

பலாப்பழத்தில் இருக்கும் சத்துக்கள்:

Jackfruit Uses And Benefits

வைட்டமின் எ, சி, பொட்டாசியம், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, நியாசின், தயாமின், நார்ச்சத்து போன்றவைகள் அடங்கியுள்ளது.