முழங்கால் கருப்பாக இருந்தால் இவற்றை செய்யுங்கள்!

images 15
images 15

பொதுவாக அழகு என்று வரும் போது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து பகுதிகளுமே சரிசமமான நிறத்தில் இருக்க வேண்டும்.

சிலர் நல்ல சிவப்பாக இருப்பார்கள். ஆனால், கை, கால் மூட்டுகள் மட்டும் கருப்பாக இருக்கும். தோல் நிறத்திற்கும், மூட்டு நிறத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

அவ்வாறான பிரச்சனைகள் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில இயற்கை தீர்வுகளை செய்தாலே போதும். எளிதில் மூட்டுகளை வெள்ளையாக்க முடியும்.

அந்தவகையில் தற்போது அவற்றை தற்போது இங்கு பார்ப்போம்.

எலுமிச்சை சாற்றினை முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் கருமையைப் போக வைக்கும்.

தயிரை முழங்கை, முழங்கால் பகுதியில் தடவி குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ, விரைவில் அப்பகுதியில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகும்.

மஞ்சள், தேனையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து, முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, சருமமும் மென்மையாகும்.

வெள்ளரிக்காயின் ஒரு துண்டை, முழங்கை மற்றும் முழங்காலில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், கருமையை நீக்கும் மற்றும் அதில் உள்ள நீர்ச்சத்து, சரும வறட்சியைத் தடுக்கும்.

பப்பாளி துண்டை மென்மையாக நசுக்கி, முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.