154 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மர நாட்டு நிகழ்வு

14

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் மரம் நாட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி. திஸ்ஸலால்த சில்வா, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். மானமடுவ, காமினி மகாவித்தியாலயத்தின் அதிபர் , ஆசிரியர்கள் மாணவர்கள் , பொலிஸார் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்டு தோறும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிஸ் தினம் நிகழ்வுகள் இவ்வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வகையில் நிகழ்வுகளை பொலிஸார் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.