20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது உறுதி என்கிறார்- ஜனாதிபதி

20th Amendment 2 700x380 1
20th Amendment 2 700x380 1

20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் வரைவில் எந்தவொரு திருத்தத்தையும் பாராளுமன்றினால் மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சபையில் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்பு வரைவில் எந்தவொரு திருத்தத்தையும் பாராளுமன்றம் மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டிற்காக பணியாற்றுவதற்கான மக்களால் தனக்கு ஆணை வழங்கப்பட்டதாகவும், எனவே 19 ஆவது திருத்தத்தை எவ்வாறெனினும் நீக்குவேன் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.