தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது

Darbar motion poster
Darbar motion poster

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’.

நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கின்றமையினால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில் அதன் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும், ஹிந்தியில் சல்மான் கானும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிட்டனர்.

வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக “தர்பார்” திரைக்கு வருகிறது.