பெகலியகொட மீன்வியாபார நிலையத்திற்கு சென்று வந்தவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை!

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

IMG 20201023 WA0012 1
IMG 20201023 WA0012 1

இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் எஸ்.குணரெட்ணம் வழிகாட்டலில் விசேட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

01 1 2
01 1 2

இதன் ஓர் அங்கமாக பெகலியகொட மீன் வியாபார நிலையத்திற்கு வியாபார நடவடிக்கையின் பொருட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து சென்று வந்தவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றது.

01 3
01 3

இதில் 25 பேருக்கு அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.

01 2 2
01 2 2

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.நசீர், எம்.ஏ.ஏ.நௌசாத், ஏ.அர்.எம்.ஹக்கீம், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

01 7
01 7