பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

ansipit
ansipit

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு.

இது மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு.

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன என்று கூறலாம்.

இதனை ஒரு சிட்டிகை சேர்த்தால் போதும் பல நன்மைகள் உடலுக்கு வழங்குகின்றது. அந்தவகையில் தற்போது தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பெருங்காயம் ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மற்றும் ஆன்டி இன்பிளாமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளதால் வீக்கம் மற்றும் வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது.
அதனால் நீங்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து பயன் பெறுங்கள். இதனை நீங்கள் தண்ணீரில் கரைத்து கூட தினமும் குடிக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு சிட்டிகை பெருங்காயம் எடுத்துக் கொள்வது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது மற்றும் மார்பு நெரிசலைக் குறைக்கிறது. மேலும், கபத்தை விடுவிக்கவும் இந்த பெருங்காயம் உங்களுக்கு உதவுகிறது.

பெருங்காயம் இரத்த உறைவதை இயற்கையாகவே தடுக்கும் திறன் கொண்டது. மற்றும் உங்களின் இரத்த அழுத்த அளவைக் குறைக்க இது உதவுகிறது. இதில் கூமரின் என்ற ஓர் கலவை உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது.

ஒரு கப் மோரில், ஒரு சிட்டிகை பெருங்காயம், வெந்தயம் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதை உங்களின் மாதவிடாய் காலத்தில் குடிக்கவும். இது மாதவிடாய் நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் வலியில் இருந்து நீங்கள் நிவாரணம் பெற உதவுகிறது.

சிறிது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனை சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த கரைசலை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். இது தலைவலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.