சற்று முன்
Home / உலகம் / அமெரிக்காவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகள் ஒத்துழைப்பு கோரல்
1 wews
1 wews

அமெரிக்காவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகள் ஒத்துழைப்பு கோரல்

ஊழல் நிறைந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இந்த பிராந்தியத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதாகவும், பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதே இதனை எதிர்கொள்வதற்கான ஒரே தீர்வாகும் என ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கட்டார் அமீருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகள் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும். மத்திய கிழக்கில் பதற்றமான ஒரு சூழலில் கட்டார் அமீரின் இந்த விஜயம் முக்கியமான ஒன்றாகும் என்றும் அச்செய்தியில் அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

jeniwa

அமெரிக்காவில் மாத்திரம் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் கொரோனவுக்குப் பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ...