சற்று முன்
Home / உலகம் / அனுமதி அளித்த பிரித்தானிய மகாராணி
el
el

அனுமதி அளித்த பிரித்தானிய மகாராணி

இளவரசர் ஹரி மற்றும் அவரின் பாரியார் மேகன் மேர்க்கல் ஆகியோரின் மாற்றத்திற்கான காலத்திற்கு பிரித்தானிய மகாராணி அனுமதியளித்துள்ளார்.

இதற்கமைய, கனடா மற்றும் பிரித்தானியால் அவர்கள் நேரத்தை செலவிடுவதற்கு மகாராணி ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், முழுநேர பணிபுரியும் அரச குடும்பத்தினர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்றும் மகாராணி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் நாட்களுக்குள் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள அவர் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்கல் ஆகியோர் விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்களும், அரசு குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகியதாகவும், எனினும், அவை உண்மைக்கு புறம்பானவை என பிரித்தானிய அரசு குடும்பம் மறுத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், பிரித்தானிய அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்துதானும், தனது மனைவியும் விலகுவதாக இளவரசர் ஹரி அண்மையில் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

china

பிரதமர் நரேந்திர மோடியின் சீனாவுக்கு எதிரான கருத்திற்க்கு பதிலடி- சீனா

இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தியா செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென  சீனா தெரிவித்துள்ளது. எல்லை ...