வருடத்தின் முதலாவது ‘தானிய சவால்’

11 1
11 1

‘தானிய சவால்’(cereal challenge) என்ற பெயரில் வருடத்தின் முதலாவது சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை கரண்டியில் எடுத்து உண்ண வேண்டும். இதுதான் இவ்வருடத்தின் முதலாவது சவால் ஆகும்.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் (சலஞ்ச்) வைரலாகுகின்ற வேளையில், அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழமையான ஒன்றாகி விட்டது.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சவால், கரப்பான்பூச்சி சவால், ஐஸ் சவால், மோமோ சவால், ப்ளூ வேல் சவால், ஐஸ் பக்கெட் சவால், டென் இயர்ஸ் போட்டோ சவால், வீடியோ கோல் சவால் போன்றவைகள் வைரலாகின.

பலரும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த வகையில், தற்போது ‘தானிய சவால்’ என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வருடத்தின் முதல் சவாலாக டிக் டொக் செயலியில் வைரலாகி வருகின்றது ”தானிய சவால்” காலை உணவாக உண்ணக்கூடிய பாலில் கலந்து சாப்பிடும் கான்பிளக்ஸை வைத்து இந்த சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து உண்ண வேண்டும். இது தான் #cerealchallenge. பாலை அதிகம் வாயில் ஊற்றிவிட்டு சிரிக்கும் போது கான்பிளக்ஸை வாயில் போட்டு இந்த சவாலை சிலர் எதிர்கொள்கின்றனர்.

எனினும் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.