சற்று முன்
Home / உலகம் / வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: கடலில் நடக்கும் மரண போராட்டம்
3 fg
3 fg

வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: கடலில் நடக்கும் மரண போராட்டம்

ஜப்பான் அருகே கடலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சுற்றுலா கப்பலில் உள்ள பயணிகளுக்கு கோவிட் வைரஸ் தாக்குவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

கடந்த 1ம் திகதி ஒருவருக்கு மட்டுமே கண்டுபிடிக்கபப்ட்ட இந்த நோய், நேற்று 174 ஆக அதிகரித்தது. இதனால், கப்பலில் .உள்ள 3700 பயணிகளும் உயிரை கையில் பிடித்தப்படி தவித்து வருகின்றனர்.

மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.

சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட 28 நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த நோயை குணமாக்க, இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால், சீனாவில் இதன் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரையில் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

இந்த வைரஸ் தாக்கும் அபாயம் காரணமாக, சீன நாட்டு மக்கள் வெளியே வர பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்.

சீனாவில் இந்நோயை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவும் நேற்று முன்தினம் முதல் களமிறங்கி இருக்கிறது.

சீனாவில் ஹூபெய் மாகாணத்தில்தான் உயிர் பலி அதிகமாக இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக ஹாங்காங்கில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

download 13

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ...