சற்று முன்
Home / உலகம் / சுரங்க ரயிலில் கொரோனா வைரஸ் திராவகம் – அலறியடித்த பொதுமக்கள்
5 dw
5 dw

சுரங்க ரயிலில் கொரோனா வைரஸ் திராவகம் – அலறியடித்த பொதுமக்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பாதுக்காப்பாக எடுத்துச் செல்லப்பட்ட கொரோனா வைரஸ் திராவகம் கொட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் அலற வைத்துள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த டேவிட் புளோரஸ் மற்றும் மோரிஸ் கோர்ட்வெல் ஆகியோர் நியூயார்க் நகர சுரங்கப்பாதையில் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

கொரோனா திராவகத்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவித்த அவர்கள் இருவரும் திடீரென்று தரையில் அந்த திராவகத்தை கொட்டியது போன்று பாசாங்கு செய்தனர்.

அந்த இருவரும் மருத்துவ பாதுகாப்பு உடை மற்றும் முகமூடிகள் அணிந்திருந்தனர்.

இதனால் பொதுமக்களும் அவர்கள் கொரோனா தொடர்பான திராவகத்தை எடுத்துச் செல்வதாகவே கருதியுள்ளனர்.

திடீரென்று அந்த திராவகம் கொட்டப்பட்டதும் ரயிலில் இருந்த பயணிகள் பலர் உயிர் பயத்தில் தெறித்து வெளியேறினர்.

ஆனால் அதன் பின்னர் இது வெறும் விளையாட்டுக்காகவே என தெரிவித்ததும், அங்கிருந்த பயணிகள் அனைவரும் நடந்தவற்றை எண்ணி சிரித்ததாக மோரிஸ் கோர்ட்வெல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதும், பலரும் தேவையற்ற செயல் இது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் இதேப் போன்று சுரங்க ரயிலில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக நடித்த இளைஞரை கைது செய்த பொலிசார்,

பொதுமக்களை தேவையின்றி பீதிக்கு உள்ளாக்கியதாக கூறி அவர் மீது வழக்குப் ப்திந்துள்ளனர்.

தற்போது அவர் 5 ஆண்டுகள் அவரை சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

1 22 jpg

கொரோனா வைரஸ்க்கு எதிரான முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது ரஷ்யா

உலகத்தின் கொரோனா வைரஸ்க்கு எதிரான முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ...