நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சாஜிட் ஜாவிட்

355
355

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நிலையில் சாஜிட் ஜாவிட் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனது உதவியாளர்களின் குழுவை நீக்குவதற்கான உத்தரவை நிராகரித்த அவர் எந்த சுயமரியாதையுள்ள அமைச்சரும் அத்தகைய நிபந்தனையை ஏற்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

சாஜிட் ஜாவிட் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நான்கு வார காலத்திற்குள் வழங்கவிருந்த நிலையில் அவரது பதவி விலகல் இடம்பெறுள்ளது.

உள்துறை அமைச்சராக இருந்த சாஜிட் ஜாவிட், கடந்த ஜூலை மாதம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

நிதியமைச்சர் சாஜிட் ஜாவிட் மற்றும் பிரதமரின் மூத்த ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் ஆகியோருக்கு இடையிலான பதற்றங்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார் என்று கூறப்படுகின்றது.

சாஜிட் ஜாவிட் தனது சிறப்பு ஆலோசகர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, அவர்களை டவுனிங் ஸ்ட்ரீட் அலுலகத்தில் ஒரே அணியாக மாற்றவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிதியமைச்சர், எந்தவொரு சுயமரியாதையுள்ள அமைச்சரும் அந்த விதிமுறைகளை ஏற்கமாட்டார் என்று குறிப்பிட்டார்.