காதலர் தின கொண்டாட்டத்தை நடத்தக்கூடாதென நீதிமன்றம் தடை

9 d 2
9 d 2

உலகில்இன்றைய தினம் காதலர்கள் தமக்கிடையே அன்பை பரிமாற தயாராகிவரும்வேளை பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தின கொண்டாட்டத்தை நடத்தக்கூடாதென நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காதலர் தின கொண்டாட்டம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், காதலர் தின கொண்டாட்டங்களை பொது இடங்களில் நடத்த முடியாது.

காதலர் தினம் தொடர்பான சிறப்பு நிகழ்வுகளை விளம்பரப்படுத்த கூடாது என்று நீதிமன்றம் ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு அறிக்கையில், பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் காதலர் தினத்தை பாகிஸ்தான் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இல்லாத ஒரு மேற்கத்திய சடங்கு என்று வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.