அமெரிக்காவில் 6 வார குழந்தை உயிரிழப்பு!

6 s
6 s

பிறந்து 6 வாரங்களேயான குழந்தையொன்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இச்சாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களேயான இந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவலை அம்மாநில ஆளுநர் நெட் லமொண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனா ஆட்கொல்லி நோய் பரவும் வீதமானது, இத்தாலியில் நோய் பரவும் வீதத்திற்கு சமமானதாகக் காணப்படுகிறது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து ஏழு பேருக்கு கொவிட்-நைன்ரீன் வைரஸ் தொற்றியுள்ளது. இங்கு நான்காயிரத்து 500 இற்கு மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளதை பிந்திய புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.