பிரான்ஸை இலக்குவைத்தது கொரோனா: ஒரே நாளில் 1,355 மரணங்கள்!

6 ed
6 ed

ஐரோப்பாவில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் பிரான்ஸில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்து தீவிர பரவலை ஆரம்பித்துள்ளது.

இதுவரை பிரான்சில் நாளுக்கு நாள் 500 பேர்வரை மரணித்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் உலக நாடுகளில் இதுவரை இல்லாதவாறு ஆயிரத்து 355 மரணங்கள் பதிவாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அங்கு மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 387 ஆகப் பதிவாகியுள்ளதுடன் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 116 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு 59 ஆயிரத்து 105 ஆக மொத்த பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், அங்கு 6 ஆயிரத்து 399 பேர் வைரஸாரல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 12 ஆயிரத்து 428 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் கோரப் பிடிக்குள் இத்தாலி, ஸ்பெயின் என ஐரோப்பிய நாடுகள் பலவும் சிக்கி மனித அழிவைச் சந்தித்து வருவதுடன் அமெரிக்காவிலும் கடும் பாதிப்பை அண்மைய நாட்களில் வைரஸ் ஏற்படுத்திவருகிறது.