ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியது பங்களாதேஷ்!

5 hh 0 1
5 hh 0 1

கொரோனா வைரஸ்  தொற்று அச்சுறுத்தல் காரணமாக, 15,000 ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

மூன்று மாவட்டங்களிலுள்ள முகாம்களில், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, உள்ளூர் மூத்த சுகாதார அதிகாரி தோஹா பூயான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நோய்த்தொற்றுகள் எதுவும் முக்கியமானவை அல்ல. பெரும்பாலான அறிகுறிகள் எதுவும் இல்லை. இன்னும் நாங்கள் அவர்களை தனிமை மையங்களில் அழைத்து வந்து அவர்களது குடும்பங்களை தனிமைப்படுத்தியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் அவர்களின் தொடர்புகளையும் நாங்கள் கண்டுபிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, முடிந்தவரை விரைவாக சோதனையை அதிகரிக்க முயற்சிக்கிறோம்’ என கூறினார்.

அண்டை நாடான மியான்மரில் 2017ஆம் ஆண்டு இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரோஹிங்கியா முஸ்லிம்கள், காக்ஸ் பஜார் முகாமில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.