இந்தியாவில் தொற்று வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

8 d
8 d

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25ம் திகதி 657 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 1. 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம்திகதி நாடு முழுவதும் பொது ஊடரங்கு அறிவித்த நிலையில் மார்ச் 25ம் திகதி முதல் அமலுக்கு வந்தது. நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் சில தளர்வுகள் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் அதிக தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

பல மாநிலங்கள் இன்று முதல் பொதுப் போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை மீண்டும் தொடங்க அனுமதித்து உள்ளன. ஆனால், ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவுகளை அறிவிக்கவில்லை.

அவை மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி ஜூன் 8 முதல் திறக்கப்படலாம். டெல்லி, ஆந்திரா, கேரளா இன்னும் புதிய விதிமுறைகளை அறிவிக்கவில்லை.

டெல்லி தனது வழிகாட்டுதல்களை இன்று வெளியிடுகிறது. தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தங்களது சொந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டன.