கொரோனா வைரஸ் தொற்று – உலகளவில் 65 இலட்சத்தை நெருங்கும் நோயாளிகள்

eee176bf7ad71ee34654d9b10bf3ad94
eee176bf7ad71ee34654d9b10bf3ad94

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 65 இலட்சத்தை நெருங்குவதாக சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 இலட்சத்து 52 ஆயிரத்து 390 ஆக பதிவாகியுள்ளது.

அந்தவகையில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 81 ஆயிரத்து 205 ஆக காணப்படுகின்றது.

இதனை அடுத்து அதிக பாதிப்புக்கள் பதிவான நாடாக பிரேசில் காணப்படுகின்றது. அங்கு இதுவரை 5 இலட்சத்து 58 ஆயிரத்து 237 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 4 இலட்சத்து 23 ஆயிரத்து 741 பாதிப்புக்களுடன் ரஷ்யாவும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 12 பாதிப்புக்களுடன் ஸ்பெயினும் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 985 பாதிப்புக்களுடன் பிரித்தானியாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதேவேளை உலகளவில் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 479 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் அதிகளவில் உயிரிழப்புக்கள் பதிவான நாடாக தொடர்ந்தும் அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 8 ஆயிரத்து 59 ஆக காணப்படுகின்றது.

அமெரிக்காவை தொடர்ந்தும் 39 ஆயிரத்து 369 உயிரிழப்புக்களுடன் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும் 33 ஆயிரத்து 530 உயிரிழப்புக்களுடன் இத்தாலி மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.