24 மணிநேரத்தில் 8,248 பேருக்கு கொரோனா

i3 24 2
i3 24 2

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 8,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் தொற்று அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது, 2 வது இடத்தில் பிரேசிலும், ரஷ்யா 3 வது இடத்திலும் உள்ளது.

நோய் பாதிப்பு குறித்து அதிபர் புதின் பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறார். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

நாட்டில் நாளொன்றின் சராசரி பாதிப்புகளின் விகிதம் 10 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,248 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 545,458 ஆக அதிகரித்தது.

ரஷ்யாவில் நோய் தொற்றுக்கு நேற்று மட்டும் 193 பேர் பலியாகினர். இதுவரை கொரோனாவிற்கு 7,284 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 9,767 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,94,306 ஆக உயர்ந்தது.
மாஸ்கோ உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நோய் பாதிப்பு குறித்து பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.