40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவு பதிவானது!

edinburgh
edinburgh

பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கண்காணிப்புக் குழு, 40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் 2020ஆம் ஆண்டு வரை, 2.2 சதவீதம் சுருங்கியது என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

இது 40 ஆண்டுகளில், அதாவது 1979ஆம் ஆண்டுக்கு பிறகு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சியைக் குறிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒரு விளைவை ஏற்படுத்தத் தொடங்கியதால், மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கம் ஏற்பட்டது.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பொருளாதாரம் குறித்த ஒரு முக்கிய உரைக்கு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் இந்த தரவு வெளியாகியுள்ளது.

மக்கள் தங்கள் ஊதியத்தை செலவிட முடியாத நிலையில், 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கும் 2020ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கும் இடையில் வீட்டு நுகர்வுச் செலவு 2.7 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.