75 நாடுகளுக்கான பயண தனிமைப்படுத்தலை பிரித்தானியா கைவிடவுள்ளது?

uk
uk

பிரித்தானிய அரசாங்கம் 75 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை முடிவுக்குக் கொண்டுவரும் என டெய்லி டெலிகிராப் செய்தியினை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய இடங்களுக்கும், பெர்முடா மற்றும் ஜிப்ரால்டர் உள்ளிட்ட பிரிட்டிஷ் பிரதேசங்கள் மற்றும் துருக்கி, தாய்லாந்து, அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கான அத்தியாவசிய பயணங்களுக்கான தடையை பிரித்தானியா விரைவில் நீக்கும் என்று டெய்லி டெலிகிராப் செய்தித்தாள் கூறியுள்ளது.

எனினும், இதுகுறித்து போக்குவரத்து அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரான்ஸ், கிரேக்கம், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் கைவிடுவதாக பிரித்தானியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம், பிரித்தானியாவுக்குள் வரும் பயணிகள் இரண்டு வார தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள வேண்டும் என அறிவித்த பின்னர், மூடப்பட்ட சுற்றுலா மற்றும் பயணத் துறையின் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.