ஆறு பால்கன் மாநிலங்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரியா!

vienna
vienna

ஐரோப்பிய ஒன்றியம், பிராந்தியத்தில் உள்ள ஆறு மாநிலங்களில் இரண்டை பாதுகாப்பான பட்டியலில் சேர்த்துள்ள நிலையில், மேற்கு பால்கன் முழுவதற்கும் ஆஸ்திரியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல பால்கன் மாநிலங்கள் தொற்றுகளில் அதிகரிப்பு காண்கின்றன. ஆனால் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் எல்லைகளை செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவுக்கு மீண்டும் திறக்க முடியும் என்று ஒப்புக் கொண்டது.

இந்தநிலையில், இப்பகுதிக்கு அதன் மிக உயர்ந்த பயண எச்சரிக்கை இப்போது உள்ளது என்று ஆஸ்திரியா தெரிவித்துள்ளது.

இதில் போஸ்னியா-ஹெர்சகோவினா, வடக்கு மாசிடோனியா, அல்பேனியா மற்றும் கொசோவோ ஆகியவையும் அடங்கும்.

அத்துடன், பயண எச்சரிக்கை மேற்கு பால்கன் பயணத்திற்கான அனைத்து பயணங்களையும் பாதிக்கிறது மற்றும் ஆஸ்திரியர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பி வருமாறும் ஆஸ்திரியா அறிவுறுத்தியுள்ளது.

திரும்பி வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்வார்கள் அல்லது எதிர்மறை கொவிட்-19 சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, போர்த்துக்கல், சுவீடன் மற்றும் துருக்கியும், ஐரோப்பாவில் ஆஸ்திரியாவும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு உட்பட்டவை.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கூறுகையில், ‘சமீபத்திய சில கொவிட்-19 நோய்த்தொற்றுகள் மேற்கு பால்கனில் இருந்து பயணித்த மக்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, எங்கள் அண்டை (ஐரோப்பிய ஒன்றிய) நாடுகளான குரோஷியா மற்றும் ஸ்லோவேனியாவில் இருந்து திரும்பும் மக்கள் மத்தியில் அதிகரிப்பு காணப்படுகிறது’ என கூறினார்.