நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் கொவிட்-19 பாதிப்பு

unnamed 7 1
unnamed 7 1

அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 54,904பேர் பாதிப்படைந்ததோடு, 616பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜூன் மாத ஆரம்பத்தில் 20 ஆயிரம் என நகர்ந்துக்கொண்டிருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 50 ஆயிரத்தை கடந்து சென்றுக்கொண்டிருகின்றது.

இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 இலட்சத்து 90ஆயிரத்து 588பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன், 1 இலட்சத்து 32 ஆயிரத்து 101பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1,522,999பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15,928பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தமாக 1,235,488பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.