திருப்பதியில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி!

201709230128430756 Tirupathi Ezhumalayyan Temple Brahmmotsavam Festival SECVPF
201709230128430756 Tirupathi Ezhumalayyan Temple Brahmmotsavam Festival SECVPF

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 11-ந்தேதி முதல் ஏழுமலையான் கோவிலுக்குள் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை தேவஸ்தானம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இணையதள வாயிலாகச் சீட்டுகள் விற்கப்பட்டு, தினமும் 12,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.