இந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு

india china
india china

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக, தேசிய பாதுகாப்புத் துறை செயலர் அஜித் டோவல் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக, இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் டோவல் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யி உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் இரு தரப்பும் உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.