தென் சீன கடல் தொடர்பான சீன திட்டம் சட்டத்துக்கு முரணானது – அமெரிக்கா

cina mendirikan sejumlah pulau buatan di laut cina selatan 20160712 150507

சர்ச்சைக்குரிய தென் சீன கடல் தொடர்பான சீனாவின் திட்டம் முற்றாக சட்டத்துக்கு முரணானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய தென் சீன கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் பெய்ஜிங்கின் “கொடுமைப்படுத்தல் பிரசாரம்” தவறானது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா வேண்டுமென்றே உண்மைகளையும் சர்வதேச சட்டத்தையும் சிதைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்பட்ட இப்பகுதியிலுள்ள செயற்கைத் தீவுகளில் சீனா இராணுவ தளங்களை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.