ரஷ்யாவில் லொறியுடன் பஸ் மோதி விபத்து

171961
171961

ரஷ்யாவின் கிரிமியா பகுதியில் மினி பஸ்ஸொன்று லொறி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந் நாட்டு நேரப்படி இந்த விபத்தானது இன்று காலை 6.40 மணிக்கு பெலோகோர்ஸ்க் நகருக்கு அருகே இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அவசர அமைச்சகத்தின் பிராந்திய திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் எவரும் இல்லை என்றும் கூறப்படுகிறது