சற்று முன்
Home / உலகம் / நேருக்கு நேர் மோதிய விமானங்களிள் 07 பேர் பலி!
202007070335197984 Tamil News 8 dead after two planes collide in the air in America SECVPF
202007070335197984 Tamil News 8 dead after two planes collide in the air in America SECVPF

நேருக்கு நேர் மோதிய விமானங்களிள் 07 பேர் பலி!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.

குறித்த விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற 64 வதுயடைய அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி, விமானி என 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் சால்டோட்னாவைச் சேர்ந்த பைலட் கிரிகோரி பெல்(57), கன்சாஸைச் சேர்ந்த டேவிட் ரோஜர்ஸ் (40), தென் கரோலினாவைச் சேர்ந்த காலேப் ஹல்சி(26), ஹீதர் ஹல்சி(25), ஓல்ட் மேக்கே ஹல்சி(24) மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து எப்.ஏ.ஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.

x

Check Also

hospital umzingwane

உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக உயர்வு

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் ஒரு கோடியே 89 இலட்சத்து 75 ...