சற்று முன்
Home / உலகம் / அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த முதல் நாய்!
1596173920718
1596173920718

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த முதல் நாய்!

அமெரிக்கவில் கொரோனாவால் பாதித்த முதல் நாய் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நியூயோர்க் நகரில் ஜேர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த நாய் உயிருக்கு போராடி வந்துள்ளது.

நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரொபர்ட் மகானே மற்றும் அலிசன் தம்பதி 7 வயதான இந்த ஜேர்மன் ஷெப்பரட் நாயை வளர்த்து வந்தனர். ரொபர்ட் மகானேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக நாய்க்கும் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதித்த முதல் நாய் இதுதான். கொரோனா பாதிப்பு காரணமாக நாய் மூச்சு விட சிரமப்பட்டது. இந்த நாய்க்கு சிகிச்சையளிக்க இரு கால்நடை வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து மீண்டு விடுமென்று எதிர்பார்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நாய் ஜூலை 11 ஆம் திகதி இறந்து போனதாக அலிசன் மகானே தெரிவித்துள்ளார். இறக்கும் முன் இரத்த வாந்தி எடுத்ததாகவும் அலிசன் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த நாய்க்கு புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 12 நாய்கள், 10 பூனைகள், புலி மற்றும் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

ca times.brightspotcdn 1 6

கடந்த ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 395 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா ...