உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 4

உலகளாவிய ரீதியாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க நாடுகளிலேயே அதிக அளவிலானவர்களுக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளன.

இது தவிர, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஹொங்கொங், பொலிவியா, சூடான், எத்தியோப்பியா, பல்கேரியா, உஸ்பெக்கிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் உயிர்கொல்லியின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 77 இலட்சத்து 95 ஆயிரத்து 854 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையி;ல் உலகளாவிய ரதீயில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 806 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஒரு கோடியே 11 லட்சத்து 86 ஆயிரத்து 424 பேர் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.