கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இஸ்ரேலிய அமைச்சர்!

Israeli
Israeli

இஸ்ரேலிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இஸ்ரேலின், ஜெருசலேம் மற்றும் பாரம்பரியத்துறை அமைச்சர் ரஃபி பெரெட்ஸ் சனிக்கிழமை பிற்பகுதியில், முந்தைய நாளில் கொரோனா தொற்று சோதனையில் தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இஸ்ரேலிய அமைச்சர் பெரெட்ஸ் ஆவார். இஸ்ரேலில் முன்னதாக சுகாதார அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனும் கொரோனா தொற்றுக்குள்ளானார்.

பெரெட்ஸின் நோயறிதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் சுய-தனிமைப்படுத்த வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.