சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

111880616 gettyimages 1210615851

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 555 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் சர்வதேச ரீதியில் 4 ஆயிரத்து 338 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் கொவிட்-19 தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

கொவிட்-19 காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 758 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் 52 ஆயிரத்து 783 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் இதுவரையில் 38 ஆயிரத்து 161 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 18 லட்சத்து 4 ஆயிரத்து 702 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியான 11 லட்சத்து 87 ஆயிரத்து 228 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 82 லட்சத்து 20 ஆயிரதது 353 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 6 லட்சத்து 92 ஆயிரத்து 354 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 14 லட்சத்து 36 ஆயிரத்து 724 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.