வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு!

100265224 gettyimages 455919660
100265224 gettyimages 455919660

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் உடனடியாக வெளியேறியுள்ள சம்பவம் நேற்று(10) இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புடன் 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் உலாவிக்கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் மீது இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மர்ம நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருந்த ஊடக சந்திப்பை ட்ரம்ப் இடையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.