கனடாவில் எதிர்பாராதவிதமாக லொட்டரியில் $500,000 பரிசு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 16
625.500.560.350.160.300.053.800.900.160.90 16

கனடாவில் எதிர்பாராதவிதமாக லொட்டரியில் $500,000 பரிசு விழுந்தமையால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் குடும்பத்தலைவி ஒருவர்.

Nanaimo நகரை சேர்ந்த Debra Allen என்ற பெண்ணே அந்த அதிர்ஷ்டசாலி ஆவார். கடந்த மாதம் 28ஆம் திகதி லொட்டரி டிக்கெட் வாங்கிய Debra Allenக்கு பரிசு விழுந்த தகவலை அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் தான் முதலில் கூறியுள்ளனர்.

இதை கேட்டு ஒரு சேர அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார் அவர். Debra Allen கூறுகையில், பரிசு விழுந்தது தெரிந்தவுடன் என் அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். எனக்கு லொட்டரியில் பெரிய பரிசை வெல்ல வேண்டும் என்ற கனவு எப்போதும் இருந்து வந்தது.

பரிசு பணத்தில் பெரும் பகுதியை ஓய்வு காலத்துக்கு பின்னர் கணவருடன் சேர்ந்து செலவிட சேமிக்க திட்டமிட்டுள்ளேன். இதோடு வீடு போல அனைத்து வசதிகளை கொண்ட Recreational வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளேன். ஏனென்றால் வான்கூவர் தீவில் முகாமிட எனக்கு மிகுந்த ஆசை உள்ளது என கூறியுள்ளார்.