கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள ரஷ்யாவின் துணைபிரதமர்!

eb4c9d232fbe5a1284c717f1ffad378f
eb4c9d232fbe5a1284c717f1ffad378f

ரஷ்யாவின் துணைபிரதமர் யூரி ட்ருட்னெவ்விற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Russian Deputy PM Yury Trutnev tests positive for Coronavirus.

ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு மேற்கொள்ளும் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியதுடன் அதில் வெற்றிபெற்றுள்ளதாகவும் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடாக ரஷ்யா திகழ்வதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இரு நாட்களுக்ளுக்கு முன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.