சற்று முன்
Home / உலகம் / ஆழ்துளை மரணங்களை தவிர்ப்பதற்கு புதிய கருவி கண்டுபிடிப்பு!

ஆழ்துளை மரணங்களை தவிர்ப்பதற்கு புதிய கருவி கண்டுபிடிப்பு!

இந்தியாவில் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி குழந்தைகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் கிணற்றினுள் விழுகின்ற குழந்தைகளை காப்பாற்றுவதற்கான கருவியை கண்டுபிடிக்குமாறு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் குடை வடிவில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.

ஆழ்துளை குழாய்க்குள் மூடப்பட்ட குடையாக தலைகீழாக செலுத்தப்படும் இந்த கருவி, அதில் விழுந்து கிடந்த ஒரு பொம்மையை சேதமேதுமின்றி வெளியே எடுக்கும் செயல்முறை விளக்கத்தை அப்துல் ரசாக் செய்து காட்டினார்.

தலைகீழாக உள்ளே செலுத்தப்படும் இந்த மெல்லிய குடைபோன்ற கருவி, உள்ளே இருக்கும் பொம்மையை கடந்து சென்ற பின்னர் பொத்தானை இயக்கி குடையை விரிவடையச் செய்ததும் சிக்கியிருந்த பொம்மை விரிந்த குடையின் மீது அமர்ந்தவாறு வெளியே வந்தடைகிறது.

இந்த கருவியின் பலனும் பலமும் அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் சிறப்பாக அமைய பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஜூன் 28 ஆம் திகதி போலந்தில் தேர்தல்

போலந்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜூன் 28 ...