சற்று முன்
Home / தமிழகம் / கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை

கோவையில் காதலர்களிடையே ஏற்பட்ட சண்டையால் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கொண்டசாமி நகரைச் சேர்ந்த கவுசிகா தேவி என்ற கல்லூரி மாணவியும், அதே பகுதியில் தனியார் பள்ளி பேருந்து சாரதியான ரமேஷ் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பல இடங்களுக்கு ஜோடியாக சென்ற இவர்களுக்குள், கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் பேசாமல் இருந்துள்ளனர்.

சம்பவத்தன்று காதலன் ரமேஷ் காதலி கவுசிகாவிற்கு போன் செய்து பேச வேண்டும் என்று கூறியதையடுத்து அவரும் கிளம்பிச் சென்றுள்ளார். சந்தித்து பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதனால் மனமுடைந்த கவுசிகா அதே பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். பின்பு இரவு 8 மணியளவில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கவுசிகாவின் உடலை மீட்ட ரயில்வே பொலிசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தமிழர்களுக்கு தனி நாடு அவசியம் என்கிறார் பா.ம.க நிறுவனர்

இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தனித் தமிழ் ஈழமே இதற்கான தீர்வாக அமையும் ...