சற்று முன்
Home / பொதுக்குரல் / ஏனையவை / சருமம் பொலிவு பெற வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்

சருமம் பொலிவு பெற வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்

தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது.

இதற்காக பணத்தை அதிகமாக செலவு செய்து கண்ட கண்ட கிறீம்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தி கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இது வயதாக பின்னடைவில் பல பக்கவிளைவுகளையும் நோயையும் உண்டாக்கி விடுகின்றது.

இதனை தவரிக்க சிறந்த வழி இயற்கை முறையில் பல உள்ளது. அதிலும் இயற்கையாக கிடைக்கும் பழங்களும், காய்கறி வகைகளும் சருமத்தை என்றேன்றும் இளமையுடன் வைத்து கொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அதில் ஒன்று தான் “ வெள்ளரிக்காய்”.இது சருமத்தை பராமரிப்பதில் சிறந்த ஒரு பொருளாக கருதப்படுகின்றது.

முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சருமத் துளைகள் சுவாசம் பெற்று புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தின் நிறத்தை சீராக்குகிறது. சருமத்தில் ஏற்படும் தோல் அரிப்பு போன்றவற்றை நீக்கி தெளிவாக்குகிறது.

கண்கள் சோர்வாகவும், கருவளையத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வெள்ளரிக்காய் அதை நீக்கி விடும்.

முகச் சுருக்கம், சுருக்கக் கோடுகள் ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனே வெள்ளரிக்காயை அரைத்து வாரம் 3 முறை முகத்தில் பூசி வாருங்கள். முகம் இளமையை திரும்பப் பெற்றுவிடும்.

வாரம் இரண்டு முறை வெள்ளரி சாறு அருந்துவதால் முடி கருகருவென நீளமாக வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி

முகப்புத்தக நிறுவனத்திற்கு சொந்தமானதும் புகைப்படங்களை பகிரும் பிரபல தளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் ...