சற்று முன்
Home / பொதுக்குரல் / ஏனையவை / வயிற்றுப் புண்ணை குணமாக்கும் எளிய வைத்தியம் !

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் எளிய வைத்தியம் !

ஒருவருக்கு வயிற்றுப் புண் வருவதற்கு காரணம் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது தான்.

ஏனெனில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது உணவைத் தவிர்த்தாலோ, இரைப்பையில் உணவை செரிக்க உற்பத்தி செய்யப்படும் அமிலத்தால், இரைப்பைச் சுவர்கள் அரிக்க ஆரம்பித்து, வயிற்றுப் புண்ணை உண்டாக்கிவிடும்.

இதனை ஆரம்பத்தில் சரி செய்வது சிறந்தது. அந்தவகையில் தற்போது வயிற்று புண் விரைவில் குறைக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்.

வயிற்றுப் புண் இருந்தால், அதிலிருந்து விரைவில் விடுபட தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

அரிசியில் உள்ள குறிப்பிட்ட சில உட்பொருட்கள் தான், வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலியைப் போக்குவதாக கருதுகின்றனர். அரிசி மட்டுமின்றி, பார்லி மற்றும் கோதுமை போன்றவையும் வயிற்றுப் புண்ணில் இருந்து விடுவிக்கும்.

அப்பிளை வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால், அது குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இதை வயிற்றுப் புண் உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் வருவது தடுக்கப்படும்.

இறால் மற்றும் மீனை வயிற்றுப் புண் இருப்பவர்கள் அடிக்கடி சாப்பிட்டால், விரைவில் விடுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி

முகப்புத்தக நிறுவனத்திற்கு சொந்தமானதும் புகைப்படங்களை பகிரும் பிரபல தளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் ...