மாசடைந்த இந்த உலக சுற்றுச்சூழல்!

3 1
3 1

மாசடைந்த இந்த உலக சுற்றுச்சூழல் மற்றும் மோசமான காலநிலை காரணமாக பலர் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படுகிறார்கள்.

அதில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது வறட்டு இருமல் தான். வறட்டு இருமல் பல காரணங்களால் வரலாம்.

அதில் சுவாச பாதையில் தொற்றுக்கள், நிமோனியா, அழற்சி மற்றும் சைனஸ் பிரச்சனை போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி, தூசி, நச்சுமிக்க பொருட்கள் காற்றில் இருப்பது போன்றவையும் ஒருவருக்கு வறட்டு இருமலை உண்டாக்கலாம்.

வறட்டு இருமல் என்பது நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற முடியாத ஒரு நிலையாகும். .

ஒருவருக்கு வறட்டு இருமல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம் மற்றும் இது குளிர் அல்லது காய்ச்சலாக கூட முன்னேறக்கூடும்.

நாள்பட்ட வறட்டு இருமல் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கி, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் தடுக்கும்.

இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதம் எளிமையான மற்றும் விரைவான தீர்வை அளிக்கும்.

மிளகு சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் சிறப்பான ஒரு பொருள் தான் மிளகு. ஒரு டீஸ்பூன் தேனில், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள சேர்த்து கலந்து சாப்பிட்டால், தொண்டைப்புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இல்லாவிட்டால், பட்டை, இஞ்சி, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.

இது கடுமையான இருமல் மற்றும் சளியில் இருந்து விரைவில் விடுவிக்கும். தேன் பகல் மற்றும் இரவு நேரங்களில் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு தேன் மிகச்சிறந்த தேர்வு.