சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா!

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா!

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு கொரோனா பரவுகின்ற விகிதத்தினை அடிப்படையாக கொண்டே அவர் இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இந்த கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் ஆய்வு நடாத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸினை குறைத்து மதிப்பிட்டமை காரணமாக சில வைத்தியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கச தலைவர் அனுரத்த பாதனிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆராதனையில் பங்கேற்று மறைந்திருப்போர் அடையாளப்படுத்துக!

அரியாலையில் இடம்பெற்ற ஆராதனையில் பங்கேற்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் யாராவது மறைந்திருந்தால், உடனடியாக தங்களை அடையாளப்படுத்துமாறு ...