ஜேம்ஸ் பாண்டுடன் இணையும் ராதிகா ஆப்தே!

rathika aapthe
rathika aapthe

தமிழில் ரஜினிகாந்துடன் ‘கபாலி’, அதற்கு முன்பு கார்த்தியுடன் ‘அழகுராஜா’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே.

அவருக்கு ஹாலிவுட்டிலிருந்து ‘ஜேம்ஸ்பாண்ட்டின் 25வது படத்திலும் ‘தி ஸ்டார் வார்ஸ்’ படத்திலும் நடிப்பதற்காக அழைப்பு வந்துள்ளது.

அதற்கான வீடியோவை அவர் தயார் செய்து அப்படங்களின் நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதை பார்த்து அவர்கள் தேர்வு செய்தால் அந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுவார். இது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.